Sunday, December 5, 2010

என்னுள்


மனிதம் கற்றுகொடுத்த நேசம்
நேசம்
புரியவைத்த மனிதம்
நீ கற்றுகொடுத்த காதல்
காதல்
புரியவைத்த நீ
எல்லாம்
என்னில் இருந்து
என்னுள்
தான்
புகழ்

நிஜம்


நேற்று நிஜம்
இன்று நிஜம்
நாளை நிஜம்
இருத்தும் எல்லாம் ஒன்று இல்லை
வேறும் இல்லை

கனவுகளின் தொடர்ச்சி நிஜம்
மாற்றங்கள் நிஜம்
மாறாமல் மரத்து போவதும் நிஜம்

அடையாளம்


என் அடையாளம் தேடி தேடி ... அடையாளமே நான் தான் என்று புரிந்த போது பல அடையாளங்கள் தொலைந்து போய் இருந்தன
pugazh

Monday, August 2, 2010





தோழமை


உனக்கும் எனக்கும்
நடுவிலான உறவல்ல - தோழமை
அது
உன்னில் கலந்த தோழமை
என்னில் கலந்த தோழமை
இரண்டும்
வேர்களில் இணைந்து
நம் ஒவ்வொரு தோழமை எழும்
வேர்களில் பூ பூக்கும் நிஜம்தான்
தோழமை

புகழ்

Friday, June 25, 2010

நேசம்


தூரங்கள்
அருகாமையை உணர்த்துகிறது.
அருகாமை அடிமைத்தனத்தை
அடையாளம் காட்டுகிறது ;


நேசம் ஒரு தருணமல்ல
ஒரு ரகசியமல்ல,
அது ஒரு முடிச்சு அல்ல,......


உணர்வின் உரசல்
சுதந்திர சுகம்
மனிதத்தின் அடையாளம்.

அருகாமை -தூரம்
இரண்டும் நேசத்தின்
அடையாளம்தான்.

புகழ்

Sunday, May 30, 2010

நான் -தந்தை



முதல் முதலாக
என் உயிர் -என் உள்ளங்கைகளில் அந்த முதல் பார்வை என் கண்கள் வழியாக என் முதுகுதண்டில் பட்டாம்பூச்சியாக மெல்ல மெல் என் உடல் முழுக்க குளிர் மத்தாப்பு -சில்லிட்டு என் தலைக்குள் வெடித்து சிதறி கண்களில் கண்ணீராக -நான் தந்தை -புகழ்

நேசம்


நேசம் அடையலாம் தேடுவதில்லை
நேசமே அடையாளம்தான்.
-புகழ்

பிரிவு


பிரிவின் அழுகை
எதிர்கால ஏக்கங்கள் இல்லை ;
பழைய தருணங்களின்
தவிர்கப்பட்ட நேச பதிவுகள்;

-புகழ்

Saturday, May 29, 2010

வலி


வலி இருந்தால் சொல்
அழ கற்றுத்தருகிறேன்
அதிக வலி இருந்தால் சொல்
சேர்ந்து சிரிக்க கற்றுகொள்வோம்
-புகழ்

புத்தர்கள்

பல போதி மரங்கள்
சில புத்தர்கள்-அவர்களை
தேடித்தான் என் ஓட்டம் ;
அவர்கள் பள்ளிக்கூடம் சேரும் முன்
சந்திக்க வேண்டும்.

புகழ்

Saturday, February 13, 2010

விடியல்

நேற்று
இன்று
நாளையும் விடியும்;
என்னை உயிர்ப்பித்து
உணர்வுகளை
உடுத்திக்கொள்ள
இந்த விடியல்
என்னகாக மட்டுமா

புகழ்

Sunday, February 7, 2010

குப்பைகள்

எனில் மலரும் உணர்வுகள்
வார்த்தை குப்பைக்குள் கரையாமல்
மௌனமாக.
நான் -உணர்வில்லா குப்பையாம்.

கனவு

கனவுகள்
விழித்தால் - நிஜம் .
நிஜங்கள் உறங்கினால்
கனவுதான்
கனவின் விளிம்பில்
நிஜகோடுகள்.
நான் விழிக்கும்போது
கனவு நிஜதிற்குள்.

Wednesday, January 27, 2010

நானும் -நீயும்

என்னால் உனக்கு
மகிழ்வு என்றல் -வருத்தமும்
என்னால்தான்.
நண்பன் நான் என்றல்
எதிரியும் நான் தான்.

என்னில் இருந்து தொடங்காதே
என்னில் முடியாதே .
என்னில் கரைந்துபோகாதே,
என்னில் கலந்துபோகதே .

கரைந்து -கலந்து - தொலைந்து .....

இணைதல் சுகம்


இணைந்து பார்
நேசம் புரியம்

நானும் -நீயும்

முழுமையாக

-புகழ்

Tuesday, January 26, 2010

தோழி

தோழி
மகளாக
சகோதரியாக
மனைவியாக
தாயாக

நல்லது

எப்போது
மனுஷியாக
உன்னை
மண்ணில் விதைக்க போகிறாய்

தோழி
ஆண் இனம் கற்றுத்தந்த
வேடங்களை தாண்டி
வேள்வியாக நிமிர்ந்து பார்.

இந்த முற்று புள்ளிக்கு அப்பால்
தொடங்கு

தோழமையுடன்
புகழ்

Monday, January 25, 2010

விழிக்கவேண்டாம் ?

தோழா
காற்றை தின்றுபார் ;
உன் சுவாசத்தை
உள்ளிருந்து நிமிர்ந்து பார்;
இருட்டுக்குள் உணர்வுகளை
தேடிகொள்;
பட்டாம் பூச்சிகளிடம் கேட்டு
தெரிந்துகொள் ;
விடியலை முகர்ந்து பார் ;

வாழ்தல் புரியும்

நேற்றில் உதிர்ந்து போ,

இன்றில் வேர்விடு ,

நாளை விதையகிவிடு.


பூமிக்குள் காத்திருந்து
வெடித்து எழு ;

விடியலுக்கு விழித்தல் வேண்டாம் .

உன்போல் இல்லாமல்
உறங்கும் விதைகளை
மார்போடு அணைத்து கொண்டு
வெடித்து எழு.

கைகளை கொடுக்காதே
அங்கே கரைந்து போ,
வெடித்து எழு,
வானம் பார்,
மனிதம் உணர்,
உணர்த்து.

வெற்றி -தோல்வி
காரணம் தேடாதே .
இரண்டும் களம் தான்.

கனவுகளில் கரைந்துபோகாமல்,
கலைத்து போகாமல்,
நிஜமாகிவிடு .

-புகழ்









Saturday, January 23, 2010

தந்தை

முடி நரைத்த மனிதர்களில்
என் தந்தை -தேடித்தான் பார்க்கின்றேன்

என்னை அவரில் எதிர்பார்த்து
விலகிநின்றேன்;
இன்று புரிந்தது
வியந்து நின்றது;

தந்தை மறைவதில்லை

நான் வாழ்கிறேனே
-புகழ்

Tuesday, January 19, 2010

அடையாளம்


நீ -நான்
வெறும் அடையாளம் தான்

அடைகாத்தல் தான் அடையாளம்
கடவுள் - மனிதம் -மிருகம்
எதன் அடைகாத்தல் நாம்?


புரியாத புதிர் இல்லை
புரிந்துகொள்ள பயம்

புரிந்தாலும் பயன்படுத்த பயம்

அடைதல் -அடைகாத்தல்
இந்த இரண்டை விட

அடையளம் தான் நிஜம்

எனக்கு பின் விட்டு செல்ல
இல்லை இந்த அடையளம்

என்னை எனக்குள்
விதைப்பது

- புகழ்







Sunday, January 17, 2010

மனிதம் விற்கபடுவது இல்லை
ஆனால் விலை பேச படுகிறது
யாரும் விற்பதில்லை - ஆனால்
வாங்கபடுகிறது.
நம் அடையாளம் தொலைக்கும் பொது
மனிதம் விழித்து பார்க்கும்
நிஜங்கள் நம்மில் தவறி
கனவுகள் மட்டும் இருந்தால்
மனிதம் களவாடப்படும்

புகழ்