Monday, January 25, 2010

விழிக்கவேண்டாம் ?

தோழா
காற்றை தின்றுபார் ;
உன் சுவாசத்தை
உள்ளிருந்து நிமிர்ந்து பார்;
இருட்டுக்குள் உணர்வுகளை
தேடிகொள்;
பட்டாம் பூச்சிகளிடம் கேட்டு
தெரிந்துகொள் ;
விடியலை முகர்ந்து பார் ;

வாழ்தல் புரியும்

நேற்றில் உதிர்ந்து போ,

இன்றில் வேர்விடு ,

நாளை விதையகிவிடு.


பூமிக்குள் காத்திருந்து
வெடித்து எழு ;

விடியலுக்கு விழித்தல் வேண்டாம் .

உன்போல் இல்லாமல்
உறங்கும் விதைகளை
மார்போடு அணைத்து கொண்டு
வெடித்து எழு.

கைகளை கொடுக்காதே
அங்கே கரைந்து போ,
வெடித்து எழு,
வானம் பார்,
மனிதம் உணர்,
உணர்த்து.

வெற்றி -தோல்வி
காரணம் தேடாதே .
இரண்டும் களம் தான்.

கனவுகளில் கரைந்துபோகாமல்,
கலைத்து போகாமல்,
நிஜமாகிவிடு .

-புகழ்









No comments:

Post a Comment