Wednesday, January 27, 2010

நானும் -நீயும்

என்னால் உனக்கு
மகிழ்வு என்றல் -வருத்தமும்
என்னால்தான்.
நண்பன் நான் என்றல்
எதிரியும் நான் தான்.

என்னில் இருந்து தொடங்காதே
என்னில் முடியாதே .
என்னில் கரைந்துபோகாதே,
என்னில் கலந்துபோகதே .

கரைந்து -கலந்து - தொலைந்து .....

இணைதல் சுகம்


இணைந்து பார்
நேசம் புரியம்

நானும் -நீயும்

முழுமையாக

-புகழ்

Tuesday, January 26, 2010

தோழி

தோழி
மகளாக
சகோதரியாக
மனைவியாக
தாயாக

நல்லது

எப்போது
மனுஷியாக
உன்னை
மண்ணில் விதைக்க போகிறாய்

தோழி
ஆண் இனம் கற்றுத்தந்த
வேடங்களை தாண்டி
வேள்வியாக நிமிர்ந்து பார்.

இந்த முற்று புள்ளிக்கு அப்பால்
தொடங்கு

தோழமையுடன்
புகழ்

Monday, January 25, 2010

விழிக்கவேண்டாம் ?

தோழா
காற்றை தின்றுபார் ;
உன் சுவாசத்தை
உள்ளிருந்து நிமிர்ந்து பார்;
இருட்டுக்குள் உணர்வுகளை
தேடிகொள்;
பட்டாம் பூச்சிகளிடம் கேட்டு
தெரிந்துகொள் ;
விடியலை முகர்ந்து பார் ;

வாழ்தல் புரியும்

நேற்றில் உதிர்ந்து போ,

இன்றில் வேர்விடு ,

நாளை விதையகிவிடு.


பூமிக்குள் காத்திருந்து
வெடித்து எழு ;

விடியலுக்கு விழித்தல் வேண்டாம் .

உன்போல் இல்லாமல்
உறங்கும் விதைகளை
மார்போடு அணைத்து கொண்டு
வெடித்து எழு.

கைகளை கொடுக்காதே
அங்கே கரைந்து போ,
வெடித்து எழு,
வானம் பார்,
மனிதம் உணர்,
உணர்த்து.

வெற்றி -தோல்வி
காரணம் தேடாதே .
இரண்டும் களம் தான்.

கனவுகளில் கரைந்துபோகாமல்,
கலைத்து போகாமல்,
நிஜமாகிவிடு .

-புகழ்









Saturday, January 23, 2010

தந்தை

முடி நரைத்த மனிதர்களில்
என் தந்தை -தேடித்தான் பார்க்கின்றேன்

என்னை அவரில் எதிர்பார்த்து
விலகிநின்றேன்;
இன்று புரிந்தது
வியந்து நின்றது;

தந்தை மறைவதில்லை

நான் வாழ்கிறேனே
-புகழ்

Tuesday, January 19, 2010

அடையாளம்


நீ -நான்
வெறும் அடையாளம் தான்

அடைகாத்தல் தான் அடையாளம்
கடவுள் - மனிதம் -மிருகம்
எதன் அடைகாத்தல் நாம்?


புரியாத புதிர் இல்லை
புரிந்துகொள்ள பயம்

புரிந்தாலும் பயன்படுத்த பயம்

அடைதல் -அடைகாத்தல்
இந்த இரண்டை விட

அடையளம் தான் நிஜம்

எனக்கு பின் விட்டு செல்ல
இல்லை இந்த அடையளம்

என்னை எனக்குள்
விதைப்பது

- புகழ்







Sunday, January 17, 2010

மனிதம் விற்கபடுவது இல்லை
ஆனால் விலை பேச படுகிறது
யாரும் விற்பதில்லை - ஆனால்
வாங்கபடுகிறது.
நம் அடையாளம் தொலைக்கும் பொது
மனிதம் விழித்து பார்க்கும்
நிஜங்கள் நம்மில் தவறி
கனவுகள் மட்டும் இருந்தால்
மனிதம் களவாடப்படும்

புகழ்