Thursday, June 14, 2012

கை நீட்டி 
காற்றை தின்று 
தூரங்களை தோளில் போட்டு
சிந்தனை விதைகளை என்னில் வைத்து 
என் ஓட்டங்கள்

சிதறியவை வாழட்டும் 
விதைத்தவை விருட்சமாகட்டும் 

என் பார்வை தொலைந்து போனால் 
தலை சாய்க்க 
இந்த விதைகளின்
வேர்கள் இருக்கும் 

-
புகழ் 

Sunday, April 29, 2012

நிஜம்

கனவை கலைத்து 
நிஜம் செய்தேன் 

நிஜம் தொலைத்து 
கனவில் விழுந்தேன் 

உடைந்த கனவு 
கோடி நிஜமாகி நின்றது


Saturday, January 21, 2012



தமிழே

கருவின் கனவே
உணர்வின் உயிரே
தமிழே என் தமிழே
நேற்றின் நிஜமே
தழுவிய தனலே
தாயின் மடியே
தந்தை சொல்லே
காதலின்  சுவரமே

தங்கமே தங்கமே
வானின் வசந்தமே
வாசல் மாகோளமே
வாழ்வின் விடியலே
நாளய நிஜமே
காலம்தந்த  உணர்வே
மூச்சில் கலந்த முத்தமிழ் சுகமே
கலங்காதே

வேரின் விருட்சம் நீ
இனத்தின் தளம் நீ
தமிழே எம் மொழி நீ

தலைபோனாலும்
நிலம்போனாலும்

இனம் போகாது
தடம் மாறாது

-புகழ்