தமிழே
கருவின் கனவே
உணர்வின் உயிரே
தமிழே என் தமிழே
நேற்றின் நிஜமே
தழுவிய தனலே
தாயின் மடியே
தந்தை சொல்லே
காதலின் சுவரமே
தங்கமே தங்கமே
வானின் வசந்தமே
வாசல் மாகோளமே
வாழ்வின் விடியலே
நாளய நிஜமே
காலம்தந்த உணர்வே
மூச்சில் கலந்த முத்தமிழ் சுகமே
கலங்காதே
வேரின் விருட்சம் நீ
இனத்தின் தளம் நீ
தமிழே எம் மொழி நீ
தலைபோனாலும்
நிலம்போனாலும்
இனம் போகாது
தடம் மாறாது
-புகழ்