Sunday, May 30, 2010

நான் -தந்தை



முதல் முதலாக
என் உயிர் -என் உள்ளங்கைகளில் அந்த முதல் பார்வை என் கண்கள் வழியாக என் முதுகுதண்டில் பட்டாம்பூச்சியாக மெல்ல மெல் என் உடல் முழுக்க குளிர் மத்தாப்பு -சில்லிட்டு என் தலைக்குள் வெடித்து சிதறி கண்களில் கண்ணீராக -நான் தந்தை -புகழ்

நேசம்


நேசம் அடையலாம் தேடுவதில்லை
நேசமே அடையாளம்தான்.
-புகழ்

பிரிவு


பிரிவின் அழுகை
எதிர்கால ஏக்கங்கள் இல்லை ;
பழைய தருணங்களின்
தவிர்கப்பட்ட நேச பதிவுகள்;

-புகழ்

Saturday, May 29, 2010

வலி


வலி இருந்தால் சொல்
அழ கற்றுத்தருகிறேன்
அதிக வலி இருந்தால் சொல்
சேர்ந்து சிரிக்க கற்றுகொள்வோம்
-புகழ்

புத்தர்கள்

பல போதி மரங்கள்
சில புத்தர்கள்-அவர்களை
தேடித்தான் என் ஓட்டம் ;
அவர்கள் பள்ளிக்கூடம் சேரும் முன்
சந்திக்க வேண்டும்.

புகழ்