தாய்மை ஒரு தருணம் அல்ல
அது ஒரு தவம் -
அது ஒரு
பருவம் அல்ல
பயணம் ;
நிஜம்தான் என்றாலும்
கனவுகளின் தொகுப்பு
வலிதான் என்றாலும்
ஒரு வண்ண வருடல்
என்னை மட்டும் சுமக்காமல்
என் இன்றைய ஓடத்தை
என்னுள் வரைந்ததற்கு
அந்த இரும்பு மனுஷிக்கு
சமர்ப்பணம்
புகழ்

வலிகள் செதுக்கிய
புன்னகை
புன்னகை செதுக்கிய
உறவுகள்
உறவுகள் செதுக்கிய
உரிமைகள்
உரிமைகள் செதுக்கிய
உணர்வுகள்
உணர்வுகள் செதுக்கிய
நிஜங்கள்
நிஜங்கள் செதுக்கிய
வலிகள் ...............